காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவர் 1946-ம் ஆண்டு இதே தினத்தில் இத்தாலியில் உள்ள லுசியானாவில் பிறந்தார்.
பிறந்த நாளையொட்டி சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். நேற்று கூட அவர் முட்டாள் தனமான முடிவு என்று கடுமையாக சாடினார். இந்த நிலையில் தான் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை மோடி தெரிவித்துள்ளார்.