உடலினுள் பிரச்சினைகள் ஏற்படுவதை விட தேகத்தின் வெளிப்புறத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதால் தான் பலரும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்கு காரணம் அழகென்ற ஒரு விடயம் தான்.
யாருக்கு தான் அழகாக இருக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும். மனிதனாய் பிறந்த அனைவரும் அழகாய் இருக்கத்தான் விரும்புகின்றனர். வெயில் மற்றும் சுற்றுப்புற சூழல் காரணமாக சருமம் பொலிவிழந்து விடுகின்றது. இதனால், பல சரும கோளாறுகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் சரும கோளாறுகளில் இருந்து விரைவில் தீர்வு காண இந்த ஐந்து எளிய வழிமுறைகளை தினமும் பயன்படுத்துங்கள்.
நன்கு முகம் கழுவுங்கள் – எப்போதும் வெளியில் சென்று வந்தாலும் வீட்டிற்கு திரும்பியவுடன் முகம் கழுவுதல் அவசியம். அதிக நேரம் மாசு உங்கள் முகத்தில் தங்குவதனால் சரும துளைகளினுள் நுழைந்து பரு போன்ற சரும பிரச்சினைகள் வர காரணமாகின்றது.
க்ரீம் – வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் வெயிலில் செல்லும் போது சன் க்ரீம்களைப் பயன்படுத்துங்கள். அதற்கு முன் அது உங்கள் சருமத்திற்கு ஒத்துப்போகுமா! என அறிந்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்
நீராவி – நீராவிப்பிடித்தல் மிகவும் நல்லது. இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களைப் போக்கவும் புத்துணர்ச்சி அடையவும் பெருமளவு உதவுகின்றது
வியர்வை வரும் வரை – தினமும் வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உங்கள் முக சருமத்தில் இருக்கும் நச்சுக் கிருமிகளை குறைக்க உதவும். பயிற்சி செய்தவுடன் வியர்வை காயும் வரை இருக்காமல் உடனே முகத்தை மட்டும் கழுவுதல் மிக முக்கியம்.
இவற்றை முறையே கடைப்பிடித்தால் சரும பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.