அரச குடும்பத்தில் இருந்து விலகியிருக்கும் மேகன் போன்று, அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அவரைப் போன்று இருப்பது குறித்து பேசியுள்ளார்.
பிரித்தானியா இளவரசர் ஹரி-மேகன் தம்பதி அரசு குடும்பத்தில் இருந்து விலகி, தற்போது கனடாவில் தங்களுடைய மகன் ஆர்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஹரி அரச குடும்பத்தை விட்டு விலகிவிடக் கூடாது என்பதற்காக மகாராணி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலனிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது விமானத்தில் பணிப் பெண்ணாக இருக்கும் பெண் ஒருவர் அச்சு அசல் மேகன் போன்றே இருப்பதால், அவரின் புகைப்படம் வெளியாகிள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த Christine Mathis என்ற 32 வயது பெண், JetBlue airline விமானநிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவரின் பெயர் Pablo Smith(37), இந்த தம்பதிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சந்தித்து கொண்டு 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர் பார்க்க அச்சு அசல் மேகன் போன்றே இருப்பதால், விமானத்தில் பயணிகள் சிலர் இவரை தடுத்து நிறுத்தி பேசியதுண்டு என்று Christine Mathis கூறுகிறார்.
அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், என்னை பயணிகள் இப்படி கூறிய போது, நான் உடனே கூகுளில் மேகனை தேடினேன், அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேகன், எனக்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. நாங்கள் இருவருமே கலப்பு இனம், ஏனெனில் என்னுடைய தந்தை ஆப்பிரிக்கன், அமெரிக்கன் மற்றும் இத்தாலியை சேர்ந்தவர், என் அம்மா ஆப்பிரிக்கா-அமெரிக்கர் என்று கூறினார்.
மேலும் நான் பல முறை பயணிகளால் நிறுத்தப்பட்டதுண்டு, ஒரு முறை லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க்கிற்கு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் என்னுடைய பாஸ்போர்ட்டை மீண்டும், மீண்டும் நன்றாக பார்த்தார்.
இதில் ஒரு சில பயணிகள், நீங்கள் தான் ஹரியை திருமணம் செய்து கொண்டீர்களே? அப்புறம் ஏன் இந்த வேலையில் சேர்ந்துள்ளீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கின்றனர்.
எனக்கு இது எல்லாம் அந்தளவிற்கு பெரிதாக தெரியவில்லை, நான் தொலைக்காட்சிகளி வேலை செய்ய விரும்புகிறேன், மேகனைப் பற்றி ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு என்று கூறி முடித்தார்.
நான் கார்ப்பரேட் மற்றும் டிவி வேலைகளைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் மேகனைப் பற்றி ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது முழுமையான கனவு.
உலகில் ஒருவரைப் போன்று ஏழு பேர் இருப்பர் என்று கூறுவர், அப்படி மேகனைப் போன்று அச்சு அசல் ஒரு பெண் இருப்பதை இணையவாசிகள் ஆச்சரியமுடனே பார்க்கின்றனர்.