நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தின் பிரபல தரப்பினருடன் உள்ள நீண்ட கால அரசியல் கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில், இந்த பொலிஸ் விசாரணை மூடி மறைப்பதற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தொலைப்பேசி அழைப்பு ஒன்று வழங்கப்பட்டமை தொடர்பில் பெயர் கூறப்பட்ட அமைச்சரினால், வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாக விசாணைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
24 வயதான குறித்த இளைஞர் வயக்ரா மாத்திரைகளை அதிகம் பெற்றுக் கொண்டமையினால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த மரணம் கொலையா என்பதனை உறுதி செய்து கொள்வதற்காக சுயாதீன பொலிஸ் பரிசோதனையினை அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.