முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை அடுத்து, அவரின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன் பின் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் 40 அடியில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் செய்யப்படுபவதற்கான பெட்டி சந்தன பேழை என்று சொல்லப்பட்டது. அதில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது.
இப்போது , அந்த பெட்டி …சந்தணப்பெட்டி அல்ல. சாதாரண மரத்தில் செய்யப்பட்ட ரெடிமேட் பெட்டி. அதற்குள் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டதாம்.
வின்சென்ட் பார்க்கர் இறுதி ஊர்வல சேவை கம்பெனியின் பார்ட்னர் ஸ்டான்லி மைக்கேல் தான் அம்மாவிற்கான அந்த பெட்டியை தயாரித்துள்ளார். இவர்கள்தான், ராஜீவகாந்தி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் பெட்டி தயார் செய்து தந்தவர்கள்.
காலை 3.30க்கு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லியுள்ளனர். மூணு நாள் ஆகவேண்டிய வேலையே சில மணி நேரங்களில் முடிக்க வேண்டி இருந்ததாம்.7 மணிக்கு 7,8 பேர்கள் சேர்ந்து, ரெடிமேடாக இருந்த ஒரு பெட்டியை தயார் படுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆச்சாம்.
சாதாரண பெட்டி என்பதால் தான், இறுதி சடங்கின்போது சந்தன கட்டைகளை பெட்டிக்குள் போட்டார்களாம்.
அந்த பெட்டியின் விலை-இந்திய மதிப்பில் 75,000 ரூபாயாம். இதனை ஒரு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது .