கொவிட் 19 என்ற கொரோனாவைரஸ் எந்த திசையில் இருந்தும் பரவும் என்று எதிர்வுகூறமுடியாது. எனவே சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அதற்கு எதிராக தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார மையம் கோரியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் 1600 பேரை காவுகொண்டு 60ஆயிரம் பேருக்கு பாதிப்பை என்று உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எட்னொம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இன்னும் அதன் பரவலை தடுக்கமுடியவில்லை. எனவே சர்வதேச ரீதியாக செயற்படும் மருத்துவ ஆய்வாளர்கள் இந்த தொற்றுக்கு உடனடியாக உரிய மருந்துகளை கண்டறியவேண்டும்.
இதன் நிமித்தம் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தற்போது சீனாவில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அடுத்தக்கட்டமாக என்ன செய்யவேண்டும் என்று சர்வதேசததுக்கு அறிவிப்பார்கள் என்றும் உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.