கடந்த 4ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவர் கொலையான வழக்கில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு இடைஞ்சலாக இருந்த துணை நடிகை ஜெயாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவரது தோழி அசினா வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:
ஜெயாவும், நானும் நெருங்கிய தோழிகள். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் இருவரும் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்க்கையை கடத்தினோம். இந்நிலையில், நான் பல ஆண் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜெயா வீட்டில் வந்து உல்லாசமாக இருப்பேன். அதில் கிடைக்கும் பணத்தில் ஜெயா பங்குக் கேட்டு தகராறு செய்ததால் அவள் மீது ஆத்திரமடைந்து, அவளது வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோக்காரர் சிராஜுதினை கூட்டணி சேர்த்துக் கொண்டேன்.
ஜெயா வீட்டிற்கு பலர் வந்து செல்வதால் நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்துவிட்டால் தங்கள் மீது சந்தேகம் வராது எனக் கருதி கடந்த டிச.2ஆம் தேதி இரவு ஜெயா வீட்டிற்குச் சென்று மது அருந்திவிட்டு, வீட்டில் இருந்து பணம், நகையை எடுத்துச் செல்ல முயன்றபோது, ஜெயா குறுக்கிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அவளது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். இவ்வாறு அசினா வாக்குமூலம் கொடுத்துள்ளார்