Loading...
விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். என்றாலும் திருமணத்துக்குப்பிறகு நாயகி வாய்ப்பு வரவில்லை.
பின்னர் படங்களில் கவுரவ வேடத்தில் நடித்தார். ‘ஆஹா கல்யாணம்’ ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘கரையோரம்’ என்று 3 படங்களில் கவுரவ வேடத்தில் வந்தார்.
Loading...
இப்போது பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் சிம்ரனுக்கு கவுரவ வேடம். இது அவர் தொடர்ந்து கவுரவ வேடத்தில் நடிக்கும் 4-வது படம். அடுத்த படத்திலாவது தனித்தன்மை வாய்ந்த வேடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்.
Loading...