கடற்படையினா் தம்மீது மூச்சு விடமுடியாமல் மயங்கி விழும்வரை தாக்குதல் நடாத்தியதாக தமிழக மீனவா் ஒருவா் கண்ணீருடன் கூறியுள்ளாா்.
அத்துடன் வைத்தியசா லைக்கு கொண்டு செல்லும்போது எதுவும் சொல்லகூடாது என கடற்படையினா் கடுமையாக அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து இரு இழு வை படகுகளும் 11 தமிழக மீனவா்களும் கைது செய்யப்பட்டிருந்தனா்.
கைதாவர்கள் சட்டவைத்திய அதிகாாியிடம் முற்படுத்தப்பட்டு பின்னா் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம்- ஜெகதாப்பட்டினம் பகுதியை சோ்ந்த சுப்ரமணியம் மாாியப் பன் (வயது48) என்ற மீனவரே இவ்வாறு இலங்கை கடற்படை தம்மை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும் , தாம் 25 வருடமாக கடல் தொழில் புாியும் நிலையில் தமக்கு 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆட்கள் அற்ற நிலையில் எனது மகனையும் தொழிலிற்கு அழைத்துச் செல்வேன் என்றும் , மகனும் சேர்ந்தே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நின்ற வேளையிலேயே இலங்கை கடற்ப்டை தம்மை கைது செய்ததாக கூறிய அவர், படகு பழுதடைந்தமையால் எம்மை கட்டி இழுத்துச் செல்ல வந்த படகும் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினர் எம்மைக் கைது செய்தமைகூட பரவாயில்லை என்றும், ஆனால் இரக்கமற்று மூவர் இணைந்து மாறி மாறி கட்டை , பொல்லினால் தம்மீது பலமாக தாக்கியபோது ஒரு கட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியாமல் மயங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக தற்பொழுது மூச்சுவிடவோ அல்லது உணவு அருந்தவோ முடியாத நிலையில் தான் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.