Loading...
புத்தளத்தில் லொறியொன்று குடைசாய்ந்துள்ளது. யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த லொறியொன்றே புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...