இலங்கை பெண்ணொருவர் நாடு க டத்தப்படுவதற்கு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பெண் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், அவரின் இந்திய பிரஜாவுரிமைக்கான விண்ணப்பம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே தாம் நாடு க டத்தப்படலாம் என்ற அ ச்சத்தில் அந்த பெண் இருந்து வந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அவரின் விண்ணப்பத்தை முன்னுரிமை முறையில் பரிசீலிக்குமாறு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.
இந்த மனுவை வீரன் மனோன்மணி என்ற பெண் 2018ஆம் ஆண்டு தா க்கல் செய்தார்.
2003ஆம் ஆண்டு இந்தியர் ஒருவரை மணம் புரிந்த இந்த பெண் இந்திய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அந்த விண்ணப்பத்திற்கு இது வரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே இதற்கிடையில் இந்திய அதிகாரிகள் தம்மை நாடு க டத்தி விடுவர் என்று அ ச்சம் ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.