வவுனியா நகர மத்தியில் பொது மலசலகூடத்திற்கு அருகாமையில் உள்ள காணியை சிலர் அடாத்தாக பிடித்து மதில் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படும் காணி நகரசபைக்கு சொந்தமானது இல்லை எனவும் அது அரச காணியே என வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு பின்புறமாக பொது மலசலகூடத்திற்கு அருகில் உள்ள காணியை சிலர் மதில் கட்டி அடாத்தாக பிடிப்பதாக கடந்த மாதம் நகரசபையின் அமர்வில் நகரசபை உறுப்பினரால் சபையின் கவனத்திற்கு கொண்ட வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணி நகரசபைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக சபையில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நகரசபை செயலாளரினால் குறித்த காணி நகரசபைக்கு உரித்தானதாயின் அதனை அகற்ற உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
இதன் போது நகரசபை உறுப்பினர்கள் சிலரால் குறித்த காணியில் காணப்படும் வாயிற் கதவை நகரசபையின் உடமையாக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
எனினும் குறித்த காணி தொடர்பில் நகரசபை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளமை தொடர்பாக நகரசபை தலைவரிடம் கேட்டபோது,
அக் காணி அரச காணி எனவும் நகரசபைக்கு உரித்தானதல்ல எனவும் தெரிவித்திருந்தார்.