என்னை ஒரு முறை கடத்திச்சென்று எனது பந்து வீச்சு விரல்களை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சம்பவமொன்றை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்திய அணிக்கு தெரிவாவதற்கு முன்னர் பதின்ம வயதிலேயே தான் பிரபலமாகியிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கிரிக்பஸ்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது எதிரணியை சேர்ந்தவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் என்னை கடத்தி சென்று எனது கைவிரல்களை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
எனது நண்பர் ஒருவரிற்கு என்னை டெனிஸ் பந்து போட்டிகளில் விளையாட வைப்பதில் ஆர்வம் அதிகம் ஆனால் எனது தந்தைக்கு அதில் விருப்பமில்லை என ரவிசந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
அன்று நாங்கள் இறுதிப்போட்டியொன்றில் விளையாடவேண்டியிருந்தது,நான் போட்டிக்காக செல்ல முயன்றவேளை நான்கைந்து நபர்கள் வந்து என்னை எங்கோயோ இழுத்துச்சென்றனர் என ரவிச்சந்திரன் அஸ்வின் நினைவுகூர்ந்துள்ளார்.
அவர்கள் என்னை வாகனத்தில் ஏற்றி நாங்கள் போகவேண்டும் என்றார்கள் நான் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டேன் அவர்கள் அதற்கு நீ இன்று விளையாடுகின்ற போட்டிக்காக உன்னை அழைத்துச்செல்ல வந்திருக்கின்றோம் என தெரிவித்தனர் என அஸ்வின் நினைகூர்ந்துள்ளார்.
அவர்களிற்கு நடுவில் என்னை அமரச்செய்தனர், என்னை அழைத்துக்கொண்டு சென்று சிற்றூண்டிகள் தேநீர் வாங்கிதந்தனர் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நான் அவர்களை போட்டி ஆரம்பமாகப்போகின்றது போகவிடுங்கள் என கேட்டேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் நாங்கள் எதிரணியை சேர்ந்தவர்கள் நாங்கள் உன்னை போகவிடமாட்டோம்,நீ போக விரும்பினால் உனது விரல்களை துண்டிப்போம் எனவும் தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவர்களை பார்த்து சரி என்பது முகத்தை ஆட்டினேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எனக்கு அதன் பின்னரும் தேநீர் வழங்கினார்கள் நான் அவர்களிடம் நான் வீட்டிற்கு செல்லவேண்டும் நிச்சயமாக கிரிக்கெட் விளையாட செல்லமாட்டேன் என தெரிவித்தேன் அதன் பின்னர்அவர்கள்என்னை வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர் என அஸ்வின் அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.