கர்ப்பமான பிறகு சினிமாவுக்கு இடைவெளி விட்டு இருந்த அவர் பிரசவத்துக்கு பிறகு நடிப்பு தொழிலில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். மூத்த நடிகை என்ற எண்ணத்தை உடைத்து இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். சமீபத்தில் தன்னை விட வயது குறைந்த ரன்பீர்கபூருடன் ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்தி படத்தில் அரைகுறை உடையில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை கிளப்பின. தணிக்கை குழுவும் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து ஐஸ்வர்யாராயின் படுக்கை அறை காட்சிகளை வெட்டி எறிந்தது. ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்தது அவரது குடும்பத்திலும் புயலை கிளப்பியது.
மாமனார் அமிதாப்பச்சன், கணவர் அபிஷேக்பச்சன், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் உறவினர்கள் கோபப்பட்டதாகவும் இதனால் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பத்தினர் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து ரகசியமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதனால் பட உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் போன் செய்து தகவல் உண்மைதானா என்றும் விசாரித்தபடி இருந்தார்கள்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அமிதாப்பச்சனிடமும் நிருபர்கள் ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றது உண்மையா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.
ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பாகிஸ்தானில் உள்ள ஒரு இணையதளம் மூலம் பரப்பப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது.