இந் நிலையில் சி.என்.என். செய்திச் சேவைாயனது கொரோனா வைரஸ் 2 மாதங்களில் எவ்வாறு விஸ்தரித்துள்ளது என்பது தொடர்பான ஆய்வினை வெளியிட்டுள்ளது.

  • டிசம்பர் 08: கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகளுடன் முதல் நபர் வுஹானில் அடையாளம்.
  • டிசம்பர் 31: வைரஸின் முதல் பாதிப்பு உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அறிவிக்கப்பட்டது.
  • ஜனவரி 01: கொரோனாவின் மையம் என கருதப்படும் வுஹானில் கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தைக்கு பூட்டு.
  • ஜனவரி 07: சீன அதிகாரிகள் தாங்கள் வைரஸை ஒரு புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • ஜனவரி 09: கொரோனாவால் முதல் நபர் உயரிழப்பு. எனினும் அவரது மரணம் ஜனவரி 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படவில்லை.
  • ஜனவரி 13: கொரோனா தொடர்பான முதல் பாதிப்பை தாய்லாந்து உறுதி செய்தது. அதன்படி சீனப் பிரஜையொருவர் தாய்லாந்தில் பாதிக்கப்பட்டார்.
  • ஜனவரி 16: கொரோனா தொடர்பான முதல் பாதிப்பை ஜப்பான் உறுதி செய்தது.
  • ஜனவரி 21: கொரோனா தொடர்பான முதல் பாதிப்பை அமெரிக்கா உறுதி செய்தது.
  • ஜனவரி 23: வுஹான் தனிமைப்படுத்தப்பட்டது, சீனாவின் முக்கிய நகரங்களில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து, சீனாவின் பல பகுதிகளுக்கான பயணக் கட்டுப்பாட்டினால் சுமார் 60 மில்லியன் மக்கள் பாதிப்பு.
  • ஜனவரி 28: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 100 ஆக பதிவானது. 2003 சார்ஸ் வைரஸின் பாதிப்பையும் கொரோன விஞ்சியது.
  • ஜனவரி 30: சர்வதேச அவசர காலநிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியது.
  • பெப்ரவரி 02: சீனப் பிரஜையொருவர் பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு, சீனாவுக்கு வெளியில் இடம்பெற்ற முதல் உயிரிழப்பாக இது பதிவு.
  • பெப்ரவரி 04: 3700 பேருடன் பயணித்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டது.
  • பெப்ரவரி 06: உலகளாவிய ரீதியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் தொகை 500 ஆக உயர்வு.
  • பெப்ரவரி 07: கொரோனா பரவல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்திய சீன மருத்துவர் லி வென்லியாங் உயிரிழப்பு.
  • பெப்ரவரி 08: பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் பெப்ரவரி 6 ஆம் திகதி உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. இது சீனரல்லாத ஒரு வெளிநாட்டவரின் முதல் உயிரிழப்பு ஆகும்.
  • பெப்ரவரி 11: உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோரின் தொகை 1000 ஆக உயர்வு, உலக சுகாதார ஸ்தாபனம் கொரோவுக்கு ‘கொவிட் – 19’ என பெயரிட்டது.
  • பெப்ரவரி 15: பிரான்சில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு, ஐரோப்பாவில் பதிவான முதல் மரணம்.
  • பெப்ரவரி 17: தனிமைப்படுத்தப்பட் டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து அமெரிக்க தனது நாட்டு பிரஜைகளை வெளியேற்றியது.