முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தனது மகளை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தை ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் முத்துஜயன் கட்டுப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் , தனது மூத்த மகளான 15 வயது சிறுமியை கடந்த மூன்று மாத காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் நன்நடத்தை பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.