பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத்தேர்தலில் போட்டியிடல் மற்றும் இருதரப்பினையும் ஒன்றுப்படுத்திய உத்தேச கூட்டணி அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்சவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் நாளை சந்தித்து பேசவுள்ளனர்.