Loading...
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்து ஆலயம் அமைக்க அங்குள்ள தமிழ் மக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வடக்கு சுமத்திராவில் வாழும் தமிழர்கள், கோவில் கட்டுவதற்கான அனுமதிக்கு கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக ஆர்ச்சிபெலாகோ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
ஜகார்த்தாவின் ஆளுநர் அனீஸ் பஸ்வெடான் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின்போது அவர் இந்தோனேசியத் தமிழர்களைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Loading...