பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து அமைத்துள்ள புதிய அரசியல் கூட்டணியின் அரசியலை எதிர்ப்பதில்லையென்ற முடிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்று சக்தியொன்று பலமாக இல்லாத நிலையில், இந்த அணி மீதான விமர்சனம் பலனற்றது என சந்திரிகா கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் விவகாரங்கள் குறித்து சந்திரிகாவை அண்மைய நாட்களில் தொடர்பு கொள்ளும் ஊடகங்களிற்கும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார்.
இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான அழைப்பையும் அவர் ஏற்றிருந்தார். சுதந்திரதின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நட்புறவாக கலந்துரையாடிய புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
சந்திரிகாவின் இந்த முடிவினால், ராஜபக்சக்களின் பெரிய தலைவலி நீங்கியதாக தெரிகிறது.