முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் ரீதியாக சில முடிவுகளை எடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிகா குமாரதுங்கவை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. அண்மையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து பொதுத் தேர்தலில் இறங்குவதற்கான உடன்பாடுகளை எட்டியுள்ளன.
இது தொடர்பில் ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வந்திருந்தார். எனினும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைவை எதிர்ப்பதில்லையென்ற முடிவிற்கு சந்திரிகா குமாரதுங்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்காவின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான அழைப்பை ஏற்றிருந்த சந்திரிகா குமாரதுங்க சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நட்புறவாக கலந்துரையாடியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சந்திரிகாவின் இந்த முடிவானது மகிந்த சந்திரிகாவின் அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அவர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.