உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்காவில் இன்னும் ஏன் எரிபொருளின் விலையை குறைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில்,
கடந்த அமைச்சரவை கூட்டம் ஒன்றில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார் உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக கூடினால் அது உள்ளூரில் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று. ஆனால் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணியின் விலை குறைவடைந்துள்ளது. கடந்த செப்டெம்பர் 62.72 அமெரிக்க டொலராக இருந்த மசகு எண்ணையின் விலை தற்போது 56 டொலராக குறைவடைந்துள்ளது.
இருப்பினும் இதுவரை எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் சிங்கப்பூரிலும் மசகு எண்ணையின் விலை குறைவடைந்துள்ளது. ஆனால் இவர்கள் எரிபொருள் விலையில் எந்தவித மாற்றத்தினையும் கொண்டுவரவில்லை.
இது பொருளாரதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கத்திற்கு திறன் இன்மையினை காட்டுகின்றது. மேலும் இவர்களின் இந்த நடவடிக்கையினால் மக்கள் மேலும் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் தேர்தல் காலப்பகுதியில் எரிபொருள் விலையை குறைத்து நன்மையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை எம்மால் காணமுடிகின்றது” என குற்றம் சாட்டினார்.