தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அமலா பால். பிரபல இயக்குனரான ஏ. எல் விஜயை திருமணம் செய்துகொண்டு, பின்னர் பிரிந்தது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்நிலையில், ஏ. எல் விஜய்யின் தந்தை அமலா பாலை தனது மகன் ஏன் விவாகரத்து செய்தார் என்பதற்கான காரணத்தை சொன்னார்.
அதில், அமலா பால் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்ததாலும், திருமணத்திற்கு பின் அவர் கூறியபடி மதம் மாறாததாலும் தான் பிரச்சனை ஏற்பட்டது என தெரிவித்தார்.
அமலா பால் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்ததாலும், திருமணத்திற்கு பின் அவர் கூறியபடி மதம் மாறாததாலும் தான் பிரச்சனை ஏற்பட்டு என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமலா பாலிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு, விவாகரத்து சர்ச்சை தேவையற்றது மேலும் அது ஒரு தனிப்பட்ட விஷயம் என்று கூறினார்.
மேலும், தனது விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த முடிவு தம்மால் மட்டும் முழுமையாக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தனுஷை தனது நலம் கூறியுள்ளார். என்றும் அமலா பால் கூறியுள்ளார்.
தனுஷ் என் நல்ல நண்பர். நான் விஜய்யை பிரிய முடிவு செய்தபோது இது வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். மேலும் எங்களுக்காக சமரச பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினார்.
அப்படிப்பட்டவர் எப்படி நாங்கள் பிரிய காரணமாக இருக்க முடியும். நானும், விஜய்யும் பிரிய தனுஷ் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று 3 ஆண்டுகளுக்கு முன்பே அமலா பால் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இரண்டாவது திருமணம் பற்றி பேசிய அமலா பால், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், தனது தற்போதைய திட்டங்களை முடித்த பின்னர் அதற்கான தகவலை வெளியிடுவேன் என்றும் கூறினார்.