ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்த இளம்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 92,446 திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் திகதி ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்துள்ளனர். பின்னர் நெயில் பாலிஷிற்கான ரூ.388-ஐ ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கு ஒன்றிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால் நெயில் பாலிஷ் டெலிவரி ஆக வேண்டிய தினத்தில் வரவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட இணையத்திற்கு சொந்தமான வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது இளம்பெண்ணிடன் பேசிய சேவை மையத்தினர், ஆர்டருக்கான பணம் இன்னும் வரவில்லை, அதனால் தான் நெயில் பாலிஷ் டெலிவரி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் பணம் வந்தால் மீண்டும் உங்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துவிடுகிறோம் என சொல்லி செல்போன் எண்ணை வாங்கியதாக கூறப்படுகிறது.
செல்போன் நம்பர் கொடுத்த அடுத்த சில மணிநேரங்களில் இளம்பெண்ணின் வெவ்வேறு வங்கிக் கணக்கில் இருந்து 5 தவணையாக 90,946 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. மேலும் அவருடைய பொது வங்கிக்கணக்கு ஒன்றிலிருந்தும் ரூ.1500 எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், இளம்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக ரூ.92,446 எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு தொடர்பான எந்த விபரங்களையும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை என கூறுகிறார். சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்த இளம்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.