பிரபல விஜய் ரிவி தொலைக்காட்சியில் தற்போது மக்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஷோ என்றால் குக் வித் கோமாளி தான். அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது காமெடி நடிகர் புகழுக்காக தான் என்கிறார்கள்.
இன்று வைரல் செலிபிரிட்டியாக இருக்கும் புகழ், சென்னையில் சந்திக்காத பிரச்னைகளே கிடையாது. அவரை சந்தித்த வாழ்க்கையின் கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.
சொந்த ஊர் கடலூர். 2008-ல் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். ஸ்டூடியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலைசெய்துகொண்டுருந்தார்.
அப்போது தான், பானா காத்தாடி படத்தில் நடிச்ச உதயராஜ் என்பவர் நட்பு கிடைத்துள்ளது. அவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.
அதன் பின் பேசிய அவர், உனக்கு நல்ல ஹியுமர் இருக்கு, என கலக்கப்போவது யாரு 6-ல் கலந்துகொள்ள வைத்துள்ளார். ஆனால் ஆடிஷன்லையே வெளியேறியுள்ளார்.
அதன் பின் சொந்த ஊருக்கே சென்றுவிட்டேன். சிறிது மாதம் கழித்து, நண்பர் ஒருவர் சென்னையில் சிஸ்டம் சர்வீஸ் வேலைக்கு கூப்பிட்டார் திரும்ப வந்தேன்.
அதன் பின்னர் மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, சிரிப்புடான்னு ஒரு ஷோவுல பாம்பாட்டி கெட் அப் போடணும்னு கூப்பிட்டாங்க. இந்த வாய்ப்பும் உதய் மூலமா வந்ததுதான். நானும் போய் நடிச்சுக் கொடுத்தேன்.
அப்படியே சின்னச் சின்ன ரோலுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்குனுச்சு. கலக்கப் போவது யாரு சீஸன் 5 முடிஞ்ச நேரம். தீனா, அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் சார்கிட்ட, அவரோட பெர்ஃபாமன்ஸுக்கு என்னை கேமியோவா இருக்க பெர்மிஷன் கேட்டார். அப்புறம் லேடி கெட் அப் கொடுத்தாங்க. அப்படியே லேடி வாய்ஸும் கத்துக்கிட்டேன்.
அதன் பின் லேடி கெட் புகழ் ஒர்க்கவுட் ஆகவும், சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் என் பயணம் தொடங்கியது. கடந்த சூப்பர் சிங்கர்ல ஸ்பூஃப் ரவுண்ட்ல அந்நியன், அம்பி ரோல் பண்ணேன். நல்லா வைரல் ஆச்சு. அதன்பிறகு வந்த நிறைய ஷோக்கள்ல கலந்துக்கிட்டேன். அப்புறம் குக் வித் கோமாளி வாய்ப்பு தேடி வந்துச்சு.
இத்தன வருட் உழைப்பு காத்திருப்புக்கு எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்தது விஜய் ரிவி எனக்குள்ள இப்படியொரு திறமை இருக்குன்னு லேட்டாதான் எனக்குப் புரிஞ்சது. அதற்கு முன்னாடி நிறைய கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கேன்.
கையில் ஒத்த ரூபாய் இல்லாமல் சென்னை இருந்த போது, வெல்டிங் வேலைக்கு சேர்ந்தேன் அங்கு எனக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பளம் தான். அதை வைத்துக்கொண்டு, வேலை செய்தேன். ஆனால் கொஞ்ச நாளில் கண் எரிச்சல் அதிகமாக இருந்ததால், லேத்து பட்டறைக்கு சேர்ந்தேன். அப்புறம் ரூஃபிங் வேலைக்குப் போனேன். அங்கு ரூஃபிங் கால்ல விழுந்து 5 நரம்பு கட்டாகிருச்சு.
இப்படியே நிறைய வேலை செய்து கஷ்ப்பட்டிருகேன்.. ஆனால் இப்போ இந்த நிலையை பார்த்து ரொம்ப சந்தோஷபடுறேன் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.