தற்போதைய வாழ்க்கை முறையில், இணையத்தள வளர்ச்சியின் காரணமாக அதிகப்படியான மக்கள் உட்கார்ந்த படியே வேலை செய்வதால் பல விதமான நோய்களை சந்திக்கின்றனர்.
அதிலும் முக்கியமான ஒன்று தான் சிறுநீரக கற்கள் பிரச்சனைகள். இதற்கு முக்கிய காரணமே உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், அதிகளவு நீர் சத்து இல்லாமல் இருப்பதுமே காரணமாக அமைக்கிறது.
அப்படி, சிறுநீரக பிரச்சினையால் அவதிப்படுவர்களை மருத்துவமனைக்கே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கரைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்…
சிறுநீரக கற்கள் பிரச்சனையை எளிதில் குணப்படுத்த இயற்கை மருத்துவம் உள்ளது. முதலில் எலுமிச்சை தோலை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பார்ஸ்லி வேர் சேர்த்து நன்கு அரைத்து, வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தேன், ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூனும், இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூனும் சாப்பிட வேண்டும்.
இப்படி தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர, விரைவில் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக் கற்கள் கரைந்துவிடும்.