வெள்ளவத்தை – எவலோக்சிடி தொடர்மாடி குடியிருப்பின் 19 ஆவது மாடியிலிருந்து கீழேவிழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எவலோக்சிடி மாடிகுடியிருப்பின் வலைவில் நேற்று திங்கட்கிழமை பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதுடைய சமுர்திகா நஜிராகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சடலம் தொடர்பான மரண பரிசோதனைகளை கல்கிஸ்ஸ நீதிவான் மேற்கொண்டுள்ளதுடன் , பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்கா களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இதன்பின்னர் சடலத்தை குடும்பத்தினருக்குக் கையளிக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.