உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த தவறியதாக சீனத்து ஜனாதிபதியை விமர்சனம் செய்த ஆர்வலர் ஒருவர் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் மலிந்து வரும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் சமூக ஆர்வலரான Xu Zhiyong.
இதனாலையே சீன அதிகாரிகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டும் வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் தலைமறைவாக உள்ள Xu Zhiyong,
உலகில் 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வியாதியை தடுக்கத் தவறிய சீன நிர்வாகத்தை சமீப நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சமூக ஆர்வலர் Xu Zhiyong சீனாவின் குவாங்ஷோ மாகாண பொலிசாரார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜி ஜின்பிங் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியானது சிவில் உரிமைகளை கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி மனித உரிமை வழக்கறிஞர்கள், தொழிலாளர் நல் ஆர்வலர்கள் மற்றும் மார்க்சிய மாணவர்களைக் கூட சுற்றி வளைத்துள்ளது.
சீனாவை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் முதன் முறையாக எச்சரித்த மருத்துவர் கைதானதும், அதே நோயால் அவர் மரணமடைந்துள்ளதும், Xu Zhiyong போன்ற சமூக ஆர்வலர்களை தூண்டியுள்ளது.
தற்போது சமூக ஆர்வலர் Xu Zhiyong கைதானது தொடர்பில் குவாங்ஷோ மாகாண நிர்வாகம் உறுதி செய்ய மறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர், கிழக்கு கடற்கரை நகரமான புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமெனில் அரசியல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கும் புத்திஜீவிகளின் டிசம்பர் கூட்டத்தை அதிகாரிகள் தரப்பு தடை செய்த பின்னர் சூ தலைமறைவானார்.
ஜியாமென் கூட்டத்திற்குப் பிறகு ஒரு டஜன் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.
பெப்ரவரி 4 ஆம் திகதி, ஜனாதிபதி ஜின்பிங் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கும் ஒரு கட்டுரையை சூ வெளியிட்டார்.
மட்டுமின்றி அமெரிக்க-சீனா வர்த்தகப் போர், ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு போராட்டங்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் அவரது தலைமையை விமர்சித்துள்ளார் சூ.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 73,336 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,900 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும் 11,795 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.