மஸ்கெலியா நல்லதண்ணியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார் 50அடி பள்ளத்தில் குடை சாய்ந்ததில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று 18.02.2020.செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலைக்கு சென்று நல்லதன்னியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்து கார் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் குடாமஸ்கெலியா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த காரில் பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் ஒருவர் மேலதிக சித்தைக்காகக் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகவே இந்த ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.