அமெரிக்கா, சீனாவுடனான உறவை மேம்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளது என்று அந்நாட்டு அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை பெய்ச்சிங் வர்த்தக விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐயோவா மாநிலத்தில் தேர்தல் வெற்றியுரை ஆற்றியபோது அவர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அந்த உரையின் போது அவர் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர்
Terry Branstadடையும் அறிமுகம் செய்து வைத்தார்.
திரு.Branstad பெய்ச்சிங்கின் நீண்ட கால நண்பர் என்ற காரணத்தால், அவரின் நியமனம், இருநாட்டுக்கிடையிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திரு. டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு சடங்கிற்கான ஏற்பாடுகள் Capitol கட்டடத்திலும், அதற்கு அருகில் உள்ள வெள்ளை மாளிகையைச் சுற்றிய வளாகத்திலும் செய்யப்பட்டு வருகின்றன.
கொலம்பியா அதிகாரிகள் சுமார் ஒரு மில்லியன் பேர் பதவியேற்புச் சடங்கில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளை சில பிரிவினர் அன்றைய நாளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.