Loading...
நுவரெலியாவில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் வீதியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
மகஸ்தோட்ட, இஹலவெவ வீதியில் நஸ்வீ தேயிலை தோட்டத்திற்கு அருகில் நேற்று மாலை குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.
தோட்டத் தொழிலாளர்கள் குழந்தைகளின் உடல்களை அவதானித்து, பொலிசாருக்கு அறிவித்தனர்.
Loading...
பிறந்து சில மணி நேரங்களான ஆண், பெண் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தேயிலை புதருக்கு அருகில் அருகருகாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை துணியால் மூடப்பட்டிருந்தன.
அவை இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தைகளின் உடல்கள் நுவரெலியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Loading...