யாழில் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் வைத்தியசாலையின் உரிமையாளரால் பாலியல் பலாத்கரம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.
குடும்பப் பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து பரவலாக பேசப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல கோடி செலவில் அமைக்கப்பட்ட குறித்த திறந்து வைக்கப்பட்டிருந்தது.
வைத்தியர் ஒருவருக்கு உரித்தான குறித்த வைத்திய சாலையில் 40 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றதுடன் அவர்களில் அதிகமானவர்கள் இளம் பெண்கள் எனவும் சொல்லப்படுகின்றது.
நாளாந்தம் ஒரு ஊழியரை குறைந்தது 18 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்கும் உரிமையாளர் அவர்களுக்கு கொடுக்கும் கொடுப்பனவு வெறும் 12 ஆயிரம் ரூபாவே என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மனவேதனையுடன் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது ஊழியர்களிடம் வாராந்தம் 6 நாட்கள் வேலை வாங்கும் வைத்தியர் அந்தப் பெண்களை தனது காம அடிமைகளாகவே பயன்படுத்த முற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தனக்கு ஒத்துப்போகாத பெண் ஊழியர்களை நாளாந்தம் கடுமையாக வேலை வாங்குவதுடன் ஊதியங்களை கொடுப்பதிலும் பல இடையூறுகளை செய்து வருகின்றதாக அங்கிருந்து வெளியேறிய பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது இவ்வாறிருக்க மருத்துவத்துக்கு செல்லும் சில இளம் பெண்களுக்கு தனியான மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் பல பெண்களை தனியான அறைக்குள் வைத்து சில மணிநேரங்கள் சிகிச்சை மேற்கொள்வதாக தனது இச்சைகளுக்கு நோயாளர்களை பயன்படுத்தி வருவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் அங்கு நோயாளர்களாக செல்லும் பல பெண்களுக்கு கடைசிவரை தெரியாத வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களுடன் நெருக்கமானவர்களிடையே பேசப்படுகின்றது.
நோயாளர்களை பார்க்கும் நேரங்களிலும் கூட வேலைசெய்யும் பெண்களை தகாத வார்த்தைகளால் அவர் திட்டுவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான பாலியல் தொல்லையால் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் 20 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தொழிலை விட்டு விலகியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் அருமை பெருமைகளை எல்லாம் மேடைகளில் தேசியம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு பேசிக்கொள்ளும் தரப்பினரது கல்விப் புலம் சார்ந்த இடங்களில் அண்மைக்காலமாக பாலியல் இலஞ்சங்களே அதிகளவில் நடைபெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது குறித்த விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கி அனைவரிடத்திலும் பேசுபொருளாக இருக்கும் நிலையில் தற்போது தனியார் வைத்தியசாலை நிர்வாகியின் கொடுமைகளும் வெளியாகியுள்ளமை மக்களிடையே பெரும் அச்சத்தையும் அருவருப்பையும் உருவாக்கியுள்ளது.
இது இவ்வாறிருக்க சாதாரண ஒரு வைத்தியராக பணியாற்றிய குறித்த வைத்தியசாலையின் உரிமையாளர் திடீரென தனியார் வைத்தியசாலை ஒன்றை கட்டி அதன் நிர்வாக பொறுப்பை மேற்கொள்கின்றார் என்றால் பல கோடி நிதி இவருக்கு எவ்வாறு கிடைத்தது? அதன் பின்னணி என்ன? என பல்வேறு சந்தேகங்கள் யாழ்ப்பாணத்து புத்திஜீவிகளிடம் மட்டுமல்லாது சாதாரண மக்களிடமும் இன்று எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.