அரச ஊழியர்கள் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்பில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர், அரச ஊழியர்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மொரட்டுவை லுனாவையில் ஆரம்பிக்கப்பட்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் முடிவடைந்துள்ளது.
குறித்த வீடுகள் ஒவ்வொன்றும் 41 இலட்சம் பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வீடுகளை பார்வையிடுவதற்காக நேற்றையதினம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்த அங்கு விஜயம் மேற்கொண்டார்.
10-25 வருடங்கள் மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் முதற்கட்டமாக 25 வீதத்தைச் செலுத்தி அரசாங்க ஊழியர்கள் இவ்வீடுகளைப் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கு 358 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.