கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அனாமதேய இணையத்தளங்களில் செய்தி வெளியாகியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்று (19) பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான்நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இன்று காலை முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
கிளிநொசசி மாவட்ட நீதவான் நீதிமன்றில் சான்றுப்பொருளாக பாரப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை முறையற்ற விதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்ததாக வெளியான போலிச் செய்தி தொடர்பிலே இந்தப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு நபரே இந்த போலிச் செய்தியின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.