மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 15 வீரர்கள் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கொண்ட தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிறது, 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மார்ச் 4ம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்னே அணித்தலைவராக இலங்கை அணியை வழி நடத்தவுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அறிவித்த 15 பேர் கொண்ட அணியில் தனுஷ்க குணதிலக சேர்க்கப்படவில்லை, அவருக்கு பதிலாக ஷெஹான் ஜெயசூரியா இடம்பிடித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய விரும்பாத குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்குகின்றனர்.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விபரம்:
- திமுத் கருணாரத்ன(அணித்தலைவர்)
- அவிஷ்கா பெர்னாண்டோ
- குசால் பெரேரா
- ஷெஹான் ஜெயசூரியா
- நிரோஷன் டிக்வெல்லா(விக்கெட் கீப்பர்)
- குசால் மெண்டிஸ்
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- தனஞ்சய டி சில்வா
- திசாரா பெரேரா
- தாசுன் சானக்க
- வனிது ஹசரங்க
- லக்ஷன் சந்தகன்
- இசுரு உதனா
- நுவான் பிரதீப்
- லஹிரு குமாரா