டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ள நிலையில் விராட் கோஹ்லி பத்தாவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட்டின் புதிய துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் லோகேஷ் ராகுல் 823 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 810 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இதற்கு முன்னர் 9-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மோர்கன் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சு தரவரிசை பட்டியலில் ரசித் கான் முதலிடத்தில் உள்ளார்.
இதில் முதல் பத்து இடங்களில் இலங்கை மற்றும் இந்திய வீரர்கள் யாருமே இதில் இடம்பெறவில்லை.