Loading...
பொதுவாக ஆண்கள் அதிகம் வெளியே சுற்றுவதாலும், முறையான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காததாலும், முகப்பருவால் மிகுந்த அவஸ்தைப்படுகின்றனர்.
இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு. இது பின்னடைவில் பக்கவிளைவுகள் ஏற்படுத்துமே தவிர பயன் அளிக்காது.
Loading...
அந்தவகையில் முகப்பருவை எளிதில் குறைக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து, 1 மணிநேரம் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் உலர்ந்து உதிர்ந்துவிடும்.
- புதினாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினாலும், அதில் உள்ள குளிர்ச்சித் தன்மையாலும், சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். அதற்கு புதினாவை அரைத்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- சுடுநீரால் ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்துளைகள் விரிவடைந்து, அதனுள் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அழுக்குகளின் தேக்கத்தால் ஏற்படும் பருக்கள் வருவதும் தடுக்கப்படும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
- ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், முகப்பரு வருவது தடுக்கப்படும்.
- தேனை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 3 முறை செய்தால், பரு பிரச்சனையே வராது.
- பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
- ஆரஞ்சு தோல் பொடியுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து, கழுவ நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் போய்விடும்.
- ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, அப்படியே விடுங்கள். குறிப்பாக இந்த முறை எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.
- 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் நீர் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வர, முகத்தில் இருக்கும் பிம்பிள் மறைந்துவிடும்.
Loading...