சென்னை 600 028 செகண்ட் இன்னிங்ஸ்’ படத்தின் முதல் நான்கு நிமிட விடியோ காட்சியை படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2007-இல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சென்னை 600 028’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘சென்னை 600 028 செகண்ட் இன்னிங்ஸ்’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்கள் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர்.
கூடுதலாக நடிகர்கள் வைபவ், மஹத் ராகவேந்திரா, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, மனிஷா யாதவ், அஞ்சனா கீரத்தி, சானா அட்லாஃப், மஹேஷ்வரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை உலகெங்கும் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தை பல்வேறு விதமாக படக்குழுவினர் புரொமோட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தில் முதல் நான்கு நிமிட விடியோ காட்சியை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
தற்போது படங்களின் முக்கிய காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக புதிய பாணியில் படங்களின் புரொமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இப் படத்தின் முதல் நான்கு நிமிட விடியோ காட்சி இப்போது வெளியிடப்பட்டுள்ளது.