விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகுவதாக அந்தக் கட்சிக்காக பேஸ்புக்கில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட ஒருவர் அறிவித்துள்ளார்.
கட்சியின் வவுனியா மாவட்டம் மற்றும் சர்வதேச இணைப்பாளராக செயற்பட்ட பொன்னுத்துரை அரவிந்தன் என்பவர், கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகும் கடிதத்தை கட்சியின் செயலாளரிடம் வழங்கியுள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்டம் மற்றும் சர்வதேச இணைப்பாளராக இதுவரை காலமும் பதவி வகித்து மக்களுக்கான சேவைகளைச் செய்து வந்த பொன்னுத்துரை அரவிந்தன் ஆகிய நான் கடந்த தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டு செயல்பட்டேன் தற்போது என் கட்சியில் பலர் இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மற்றும் என் தனிப்பட்ட வேலை சுமை காரணமாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி நான் என் தனிப்பட்ட வாழ்க்கையினை வாழ்வதற்காக என் சர்வதேச மற்றும் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்து இன்றிலிருந்து வெளியாகி அக் கட்சி செயலாளர் நாயகமிடம் என் விலகல் தொடர்பான ஆவணத்தினை கையளிப்புச் செய்துள்ளேன்.
எனவே கருணா அம்மானினால் வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் கட்சியிடம் மீண்டும் கொடுத்துவிட்டேன் இன்றிலிருந்து கட்சி தொடர்பான எந்த ஒரு செயல்பாட்டுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதனை நான் என் சுய விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.