Loading...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை நீதிமன்றத்தின் உத்தரவின்றி கைது செய்ய முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்ற இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
தான் கைது செய்யப்படுவதற்கு தடையுத்தரவு கோரி, கிஹான் பிலபிட்டிய நேற்று ரிட் மனு சமர்பித்திருந்தார்.
குறித்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம் நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Loading...
இதன்போது, நீதிமன்ற உத்தரவின்றி மனுதாரரை கைது செய்ய முடியாது என சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Loading...