தனது வயதான தாயை பணம் தரவில்லை என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கொடூர மகன் கைதாகியுள்ளார்.
பணம் தரவில்லை என்பதற்காக தத்தெடுத்து வளர்த்த 72 வயதான தனது தாயை தாக்கி அவரின் பற்களை உடைத்து, பெட்ரோல் ஊற்றி குறித்த நபர் எரிக்க முயன்றுள்ளார்.
திருமணத்தின் பின்னர் பாணந்துறையில் வசிக்கும் இளைஞன், பெருந்தொகை பணம் கடன் பெற்று, அதை அடைக்க முடியாமல் திண்டாடியுள்ளார்.
தனது வளர்ப்பு தாயாரிடம் பணம் கேட்டு, தொல்லை கொடுத்து வந்துள்ளார். தாயார் பணம் கொடுக்க மறுத்ததும், அவரை தாக்கி பற்களை உடைத்து, பெற்றோல் ஊற்றி கொளுத்த முயன்றுள்ளார்.
எனினும், அயலவர்கள் அவரை காப்பாற்றி, இளைஞனை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர் ஜின்தோட்ட, கினிகுருண்ட பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.