நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு அடிக்கடி வந்து உல்லாசம் அனுபவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் தற்போது ஏராளமான மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில், கேரள ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் என்ற பெயர்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதில், சில மசாஜ் சென்டர்களில் கேரளா, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்தது.
இதனையடுத்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பல பெண்கள் மீட்கப்பட்டதையடுத்து சில மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தனர். போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததால் மசாஜ் சென்டர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் புதிது புதிதாக மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மசாஜ் சென்டர்கள் மூடப்பட்ட இடங்களில் வேறு பெயர்களில் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வரும் மசாஜ் சென்டர்கள் சிலவற்றில் மீண்டும் விபசாரம் தொழில் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இளம்பெண்களின் ஆபாச படங்களுடன் ஆன்லைனில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். இவ்வாறு ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து அந்த மசாஜ் சென்டர்களுக்கு ஏராளமான வாலிபர்கள், மாணவர்கள், அரசியல் புள்ளிகள் செல்கிறார்கள்.
அவர்களுக்கு இளம்பெண்களை மசாஜ் செய்ய வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது. மேலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. இது தொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.