மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து அரவு கூட்டுப்படையின் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியதாவது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததது.
ஈரானிய ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் ஏமன் தலைநகர் சனாவிலிருந்து சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து பல ஏவுகணைகளை ஏவினர்.
எனினும், சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு படைகள் அதை தடுத்து நிறுத்தி நடுவானில் அழித்தன.
இந்த ஏவுகணைகள் சவுதி அரேபியாவில் உள்ள நகரங்களையும் பொதுமக்களையும் குறிவைக்கும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் திட்டவட்டமான முறையில் ஏவப்பட்டன.
இந்த தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கர்னல் துர்கி அல்-மாலிகி விவரித்தார்.