பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அவர் தொடர்பில் பொருத்தமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கருத்துரைக்க அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் முரண்பாடு மிக்கவை என இன்று நடைபெற்ற அரசமைப்பு பேரவையின் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரியில் அண்மையில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிக் கெண்டிருந்தபோது, தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று பொலிஸ்மா அதிபர் உரையாடியமை குறித்து, அவரிடம் விளக்கம் கோர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கும் பொறுப்பை ஜனாதிபதியிடம் கையளிக்க அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.