பிரித்தானியாவில் காதலன் ஒருவன் முன்னாள் காதலியை உயிரோடு தின்ன முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
27 வயதான Jamie Mitchell என்ற நபரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதில்,Yeovil பகுதியை சேர்ந்த 25 வயதான Melody Moon என்ற இளம்பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இருவரும் காதலித்து வந்த நிலையில் Jamie Mitchellலின் வன்முறை குணத்தை அறிந்த Melody Moon அவரை விட்டு பிரிந்துள்ளார்.
இந்நிலையில், Jamie Mitchell முன்னாள் காதலியை பழிவாங்க நாடகமாடி Melody Moonனை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
Melody Moonனும் Jamie Mitchell திருந்திவிட்டார் என கருதி அவரது அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்த முன்னாள் காதலியை Jamie Mitchell கடுமையாக தாக்கியுள்ளார்.
“உன்னை கொல்ல போகிறேன்” என கூறி Melody Moonனை கடுமையாக கடித்து குறியுள்ளார்.
பின்னர், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு Jamie Mitchell வீட்டிற்கு விரைந்து அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் Jamie Mitchellலை கைது செய்துள்ளனர். பின்னர், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த Melody Moon-னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் Jamie Mitchell-லுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
மேலும், இனி அவர் Melody Moonனை காண தடைவிதித்து, அவருக்கு ஏற்பட்டுள்ள மன நோய்க்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
Jamie Mitchell தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட Melody Moon தீவிர தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.