இந்தியாவில் புழக்கத்துக்கு வந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டு மூலம் பல்பு எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோவில், சுமார் 30 வினாடிகள் 2000 நோட்டு சூரிய ஒளியில் வைக்கப்படுகிறது.
பின்னர், ஒரு அறைக்குள் பல்புடன் இணைக்கப்பட்ட மின்கம்பிகளின் இரு முனைகளையும் நோட்டின் பாதுகாப்பு நூலிழையில் வைக்கும் போது பல்பு எரிகிறது.
ரூபாய் நோட்டில் உள்ள பாதுகாப்பு நூலிழை சூரிய ஒளி மின்சாரத்தை சேமிக்கும் திறனுடயது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது, ரூபாய் நோட்டில் உள்ள பாதுகாப்பு நூலிழை மந்த உலோகத்தால் ஆனது. அது நீண்ட காலம் ரூபாய் நோட்டை பாதுகாப்பாக தக்க வைக்க உதவுகிறது.
அதற்கு சூரிய ஒளியை சேமிக்கும் திறன் கிடையாது. குறித்து வீடியோ ஒரு போலியான வீடியோ.
மக்கள் ரூபாய் நோட்டின் முக்கிய அம்சங்களை அறிந்து இது போன்ற போலி வீடியோக்களுக்கு எதிராக விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.