அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற ஜனவரி 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அங்கிருந்து இறக்குமதி செய்யும் கம்பெனிகளுக்கு 35 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.
தற்போது புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிய அளவில் வெளியேற்றும் டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க தொழிலபதிபர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.