வட மாகாண சபையில் தனியான தேசிய கீதம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி பின்வருமாறு, வடக்கு மாகாணசபையில் புதிதாக தேசிய கீதம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் தேசிய கீதம் வட மாகாணசபையில் இனி இசைக்கப்படாது. புதிய தேசிய கீதம் ஒன்றை உருவாக்க உள்ளதாக வட மாகாணசபையின் தவிசாளர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை இவ்வாறு தனியான தேசிய கீதம் ஒன்றை உருவாக்குவது மாகாணசபை அதிகாரங்களை மீறும் செயலாகும்.
இதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை. வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன.
இதேவேளை, வட மாகாணசபையில் அண்மையில் மாகாணசபைக்கான தனியான கீதம் ஒன்று அமைப்பது பற்றியே யோசனையே முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பிரபல சிங்கள நாளிதழான திவயின பத்திரிகையில் தேசிய கீதம் உருவாக்கப்பட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கீதம் வேறு மாகாணசபைக்கான கீதம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.