விரத காலங்களில் விரதத்தை முடிப்பதற்கு முன்னர் கடவுளை பிரார்த்தித்து ஒரு பிடி அன்னத்தை காகத்திற்கு வைப்பது வழக்கம். ஆனால் சில வேளைகளில் அந்த அன்னத்தை காகம் வந்து உண்ணாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை கிணற்றில் போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காகத்திற்கு அன்னம் வைப்பதன் மூலம் ஜீவராசிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தே புலப்படுகின்றது. எனவே, அன்னத்தை காகம் உண்ணாத சந்தர்ப்பங்களில் அதனை கிணற்றில் உள்ள மீன்களுக்கு போடலாம்.
ஆனால், மீன்கள் இல்லாத கிணற்றில் போடுவதை விட அந்த அன்னத்தை நாய்களுக்கு வைக்கலாம் என கூறப்படுகின்ற போதிலும், சிராத்தம் செய்த பின் காகத்திற்கு வைக்கும் பிண்டத்திற்கு இந்த விதி பொருந்துவதில்லை.
எனவே, அவ்வாறு சிராத்தம் செய்த பின் வைத்த அன்னத்தை காகம் எடுக்க வராவிட்டால் அதனை ஆறு, குளம், ஏரி அல்லது கடல் முதலான மீன்கள் வாழுகின்ற தீர்த்தங்களில் கரைப்பதே சுபம்.