Loading...
அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் தொடர்பிலான, அனைத்து இணைய ஊடுருவல் சம்பவங்களையும், வெளிநாடுகள் தலையிட்ட சம்பவங்களையும் விசாரிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க வேவுத் துறைக்கு அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அடுத்த மாதம், அதிபர் பொறுப்பில் இருந்து இறங்குவதற்கு முன்பாக, அது குறித்த அறிக்கை தயாராகவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Loading...
தேர்தலில், ரஷ்யா தலையிட்டிருக்காது என்று தாம் நம்புவதாக, புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் கூறியிருந்தார்.
இருந்தபோதும், அந்த விசாரணையை நடத்துவதற்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
Loading...