மழைக் காலங்களில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் எளிதில் தாக்கக் கூடிய ஒரு நோயாக சளி, தொண்டை வலி உள்ளது.
இதனை குணப்படுத்த இயற்கையான முறையில் நமது வீட்டிலேயே மிகவும் எளிமையாக சுக்கு- மல்லி காபியை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- தனியா – 150 கிராம்
- சுக்கு – 50 கிராம்
- மிளகு – 10 கிராம்
- திப்பிலி – 10 கிராம்
- சித்தரத்தை – 10 கிராம்
- பனை வெல்லம் அல்லது கருப்பட்டி – தேவையான அளவு
செய்முறை
பனை வெல்லம் அல்லது கருப்பட்டியை தவிர்த்து, தனியா, சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை ஆகிய பொருட்களை தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மென்மையாக அரைத்து, பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
பின் தயார் செய்த பொடியை காற்றுப் போகாமல் மற்றும் ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
பின் நமக்கு தேவையான போது, ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடியை கலந்து, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி வடிகட்ட வேண்டும்.
இப்போது சுவையான, மணமான சுக்கு- மல்லி காபி ரெடி.
சுக்கு- மல்லி காபியை சளி மற்றும் தொண்டை வலி இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகி வரலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.